Friday 12 June, 2009

கிரிக்கெட்டில் இனிப் பார்வையாளர்களும் களத் தடுப்பு(ஃபீல்டிங்) செய்யலாமோ!?

.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் என்ற வீரர் ஒரு சாகசம் நிகழ்த்தினார். அவர் நிகழ்த்திய சாகசம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கிடைக்க வேண்டிய 6 ஓட்டங்களுக்குப்பதிலாக 3 ஓட்டங்களே கிடைத்தது. போட்டியைப் பார்த்தவர்களுக்கு நடந்தது என்ன எனத் தெரியும். இருப்பினும் நிகழ்ந்ததை விவரிக்கிறேன்.

போட்டியில் இலங்கையின் இலக்கைத் துரத்திக் கொண்டு மேற்கிந்திய வீரர்கள் தங்கள் மட்டை விளாசலைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். அவ்வணியின் முன்னாள் தலைவர் ரம்நரேஷ் சர்வன் தன்னை நோக்கி வீசப்பட்டப் பந்தினை தூக்கி அடித்தார். பந்து, மைதானத்தின் எல்லையை நோக்கி வானில் பறந்தது. எல்லையைத் தாண்டினால் ஆறு ஓட்டங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. எல்லைப் பகுதியில் களத்தடுப்பு செய்து கொண்டிருந்த இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ், பந்து எல்லையைத் தாண்டிவிடும் முன் தடுக்க எண்ணி ஓடினார். எம்பிக் குதித்துத் தடுக்கவும் செய்தார், எல்லைக் கோட்டின் அருகாமையில்.ஆனால், அவரின் தடுப்பையும் மீறி பந்து எல்லைக் கோட்டைத் தாண்டி வானில் பறந்தது. அவ்வீரரும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது, எம்பிய வேகத்தில் எல்லைக் கோட்டைத் தாண்டிப் போய் விட்டார்.(தரையில் எல்லைக் கோட்டினைத் தாண்டி அவர் கால்கள் பட்டன..)


உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர், மீண்டும் வானில் மீண்டும் எம்பிக் குதித்து, பந்தினை எல்லைக்கப்பால் பூமியில் விழும் முன்னர், விளையாட்டு மைதானத்தின் எல்லைக்குள் தள்ளினார். இப்போது மட்டை விளாசும் அணிக்கு ஆறு ஓட்டங்கள் தர வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பம் நடுவர்களுக்கு ஏற்பட்டது. சில நிமிட சிந்தனைக்குப் பிறகு கள நடுவர், மூன்றாம் நடுவரை கலந்தாலோசித்து விட்டு, பந்து தடுக்கப்பட்டதால் 3 ஓட்டங்கள் மட்டுமே வழங்கப்படுவதாக அறிவித்தார்.

இங்கேதான் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கத் தோன்றியது. பந்து களத்துக்கு வெளியே சென்று விட்டது. வீரரும் சென்று விட்டார். வீரரின் கால்கள் மைதானத்தின் எல்லைக்கப்பால் பட்டு விட்டது. அதன் பின்னர், அவர் மைதானத்துக்குள் திரும்பி வரும் முன்னரே, பந்தினை உள்தள்ளியிருக்கிறார். அவரை எப்படிக் களத் தடுப்பு வீரராகக் கருதுவது..!?

கிரிக்கெட் பார்க்கும் அனைவரும் அறிந்த விவரம் என்னவென்றால், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில், வீரர்கள் வட்டத்துக்குள் குறிப்பட்ட ஓவர்கள் வரை நிற்க வேண்டும்.. அந்தக் குறிப்பிட்ட ஓவர்களுக்கு மேல் வட்டத்துக்கு வெளியில் குறிப்பிட்ட அளவு வீரர்கள் இருந்தேயாக வேண்டும் என்றெல்லாம் விதிகள் வகுத்துக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டு.. அப்படியான விதிகளில் தவறு நிகழ்ந்தால், வீசப்பட்ட பந்து கணக்கில் கொள்ளப்படாமல், உதிரி ஓட்டங்கள் தருவதும், அந்த பந்தில் மட்டை விளாசி ஓட்டங்கள் எடுக்கப்பட்டால் கணக்கில் எடுத்துக் கொள்வதுமாகவே விதிமுறைகள் வகுக்கப்பட்டுப் பின்பற்றப்பட்டு வருகிறது.

அப்படியிருக்க, மைதானத்தின் எல்லையைத் தாண்டிவிட்ட ஒரு வீரர், மீண்டும் மைதானத்துக்குள் திரும்பாமல் பந்தினைத் தடுப்பதை எப்படிக் களத்தடுப்பாகக் கொள்வது..!? மைதானத்திற்குள் அவர் மீண்டும் திரும்பாத நிலையில் அவர் பார்வையாளர் கூட்டத்தில் ஒருவராகத்தானே கருதப்பட வேண்டும்...!? பிறகு எப்படி இப்படி ஒரு முடிவு..!? யார் கண்டது, இனி ரசிகர்களும் கூடக் களத் தடுப்பு செய்யலாம் என புது விதி கொண்டு வந்தாலும் வருவார்கள், கிரிக்கெட் விளையாட்டு அமைப்பின் உலக நிர்வாகிகள். :) ஆனால், அந்த சாகசம் நிகழ்த்திக் காட்டிய வீரரின் சாகசம் காண்கையில் ரசிக்கும்படியாகவே இருந்தது. வாழ்த்துகள் அவ்ருக்கு.


.

6 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அறிவியல் ரீதியான விளக்கம் நன்றி தல...

விதிகளின்படி தீர்ப்பு கொடுக்கப் பட்டது. விதியில் தவறு இருப்பின் விதிகள் திருத்தப் படலாம். அதுவரை பழைய விதியெ பின்பற்றப் படும்

தீப விவேகன் said...

இல்லை சுரேஷ். அப்படியொரு விதி இல்லை. அவர்கள் சொன்னது, மேத்யூஸின் கால்கள், அவர் பந்தினைத் தடுக்கையில் எங்கும் பட்டுக் கொண்டிராததால், அது 6 ஓட்டங்கள் அல்ல என்றுதான்.

இங்கு கேள்வி என்னவென்றால், பார்வையாளரோ, அந்த அணியின் ஓய்விலிருந்த ஆட்டக்காரர்கள் ( ரிசர்வ் ப்ளேயர்ஸ் ) அந்தரத்தில் தடுத்திருந்தால், அதுவும் களத் தடுப்பாகி விடுமா..!? இல்லைதானே..!?

இதுவரை, தரையில் பாவி வந்தப் பந்தினைத் தடுக்கையில் எல்லைக் கோட்டுக்கு வெளியே சென்றவர், மீண்டும் உள் திரும்பி வராது பந்தினைத் தொட்டால் 4 ஓட்டங்கள் கொடுப்பதுதான் வழக்கம், விதியாக இருந்தது. அழகான தடுப்பு என்பதற்காக விதிகளை மீறக் கூடாது. அழகை ரசிக்கலாம்.. அதற்காகத் தடுமாறக் கூடாது.

கருத்து பதிந்தமைக்கு நன்றி சுரேஷ்.

Anonymous said...

http://cricketnext.in.com/news/mcc-okays-angelo-mathews-super-save/41621-29.html

தீப விவேகன் said...

What do you want to say by that link Mr/Ms Anonymous..!?

You mean, that kind of brilliance should not be outlawed..!?

Sorry ya.. think this scenario... In future, if any player comes to know that there is going to be a flat six, then they can think about getting them in line for the ball from outside the boundary and jump in the air to push the ball back to field then..

In that case too, player need not to be touch the ground outside, they can succeed in that as well. If they succeed in doing that, then what the socalled rules will say..!?

We can enjoy such kind of fielding to the core, but yet that is not good for cricket at all.

Anyhow, thanks for giving that link here. And thanks for reading this blog too.

Anonymous said...

But keep in mind Mr.தீப விவேகன் that that ball was caught inside the boundary so that this decision was made by the umpires who have clearly studied the rules of game. As per the rules, this is accepted and they have to come up with new amendments to handle such situations in future.

And the concept of vertical plane is invalid here otherwise players can not stay just on the boundary and catch the ball which actually passed into the vertical boundary line

தீப விவேகன் said...

Very funny. Didn't U know about very pathetic umpiring decisions made by the socalled umpires..!?

For example, when India toured WI in 2001, Billy Doctrove did not give run out for a WI player even he was few yards away from the crease. He is an umpire who studied the laws of the game to the core, right..!?

Such kinda bad happenings, foolish decisions were part of cricket just like this recent one.

I am sorry to say this.. This ball catched inside the boundary line..!? Are you so sure..!? Please check it once again man. He did attempt to stop the ball when he was inside the boundary line, but he could not able to do so. And also the momentum took not only the ball outside, took him as well over the rope.

He was landed outside the boundary, his legs were touched the outfield, then for the 2nd time he jumped in the air to push the ball back in the field. Whenever he crossed the rope, then did not come back to the field, he lost his rights to stop the ball as he was not in the playing area, whatever position he could be in, that either he was grounded or in the air while touching the ball.

விளையாட்டு விளையாடப்படும் பகுதியிலிருந்து வெளியேறிய ஒருவர், விளையாடப்படும் எல்லைக்குள் திரும்பும் முன்னர், பந்தினைத் தடுப்பது என்பது மிகத் தவறான ஒரு உதாரணம். அது அந்தரத்தில் பறந்தோ, தொங்கியோ இருக்கலாம். பார்க்க அழகாகவும் இருக்கலாம்.

அதே வீரர், பந்தினை மீண்டும் எல்லைக்குள் நுழைந்தபின் தொட்டிருந்தால், அது மிக அருமையான தடுப்புதான். ஆனால், அவர் தன் உடலின் எந்தவொரு பாகத்தையுமே இரண்டாம் முறை பந்தினைத் தொட்டபோது, விளையாடப்படும் எல்லைக்குள் கொண்டு வந்திருக்கவில்லை. கடைசியாக அவரின் கால்கள் பட்ட இடம் எல்லைக்கு அப்பால்தான். அதனால், அவர் விளையாட்டு வீரர் என்பதை விட ஒரு பார்வையாளருக்கு என்ன வரைமுறையோ, ஒரு பதிலி ஆட்டக்காரருக்கு என்ன விதிமுறையோ, அந்த கட்டுப்பாடுகளுக்குள்ளேயே வர வேண்டுமே அன்றி, அவருக்கு பந்தினைத் தடுக்க உரிமை அப்போதைய நொடிகளில் கிடையாது.

இதுவரை, அதற்கென தனிப்பட்ட விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. ஏற்கனவே இருக்கும் விதிமுறைகள், கால்கள் பந்தினைத் தடுக்கையில், வெளிப்புறத்தில் பட்டுக் கொண்டிருக்கின்றனவா எனதான் பேசுகின்றன. இதுபோலான சம்பவங்களுக்கு தனி விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டி இருக்கிறது.

அப்படியான விதிகள் உருவாக்கப்படுகையில் ஒருவேளை இது சரிசெய்யப்படுமாக இருக்கலாம்.

நன்றிகள் கருத்திட்டமைக்கு.